மகா கும்பமேளாவை ஒட்டி பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை 13 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடி உள்ளனர். பிப்ரவரி 26ம் தேதி வரை கும்பமேளா நடைபெறும் நிலையில், அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.