தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாரத மாதாவுக்கு மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
குடியரசு தினத்தையொட்டி ஹைதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரியில் பாரத மாதாவுக்கு மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் ஜிஸ்னு தேவ் வர்மா, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏரியின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த 2 படகுகளில் இருந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்ததில் 2 படகுகளும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் படகில் இருந்தவர்களில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், மற்றவர்கள் ஏரியில் குதித்து கரை சேர்ந்தனர்.