ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.