ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என திருமாவளவன் கூறுவது முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதும், அதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மூவர் மீதே குற்றம் சுமத்தி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் வேங்கைவயல் கிராம மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாகவும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
சமூகநீதி குறித்து திமுக தலைவர்கள் பேசுவதெல்லாம் வாக்கு வங்கி அரசியலுக்கான அலங்காரச் சொற்கள் தான் எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.