சென்னையில் 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் வெளியில் சென்றுவிட்டு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து செல்போன் சிக்னல் வாயிலாக சிறுமியின் இருப்பிடத்தை அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்போது 3 சிறுமிகள் தங்கள் காதலர்களுடன் அங்கு தனிமையில் இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.