தவெக-வில் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுடன் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து குரல் கொடுக்கும் பொருட்டு போக்குவரத்து, டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறைகளில் தொழிற்சங்கம் அமைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தவெக சார்பில் கடந்த 4 மாதங்களாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த், மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
10 நாட்களுக்கு பின் 2-ம் கட்ட ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தை மாதத்திற்குள் தவெக-வின் தொழிசங்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.