தென்காசியில் நடைபெற்ற நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இயற்கைவள காப்பு மையம் சார்பில் 15-வது ஆண்டாக நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. அச்சன்புதூர், இலத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கல்லூரி மாணவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது, ரஷ்யா, ஐரோப்பா நாடுகளிலிருந்து வந்துள்ள கார்கினி, நீலவால் பஞ்சுருட்டான் உள்ளிட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.