சென்னை சூளைமேடு பகுதியில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்பகுதியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அண்ணா நெடும்பாதை பகுதியில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், காரில் இருந்த ஃபயாஸ் சமீது மற்றும் சந்திரசேகர் ஆகியோரிடம் கொக்கைன் போதைப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.