கும்ப மேளாவையொட்டி பிரயாக்ராஜ் சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, சுவாமி அவதேஷானந்த கிரியிடம் ஆசி பெற்றார்.
மகா கும்ப மேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடினார். பின்னர், தனது மனைவி சோனல் ஷாவுடன் சென்று சுவாமி அவதேஷானந்த கிரியை சந்தித்து பழங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி அமித் ஷா ஆசி பெற்றார்.