திருமணத்தின் போது மணமகனுக்கு வேறொரு மனைவியோ அல்லது மணமகளுக்கு வேறொரு கணவனோ இருக்கக் கூடாது.
திருமணத்தின் போது ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தங்களின் மதச் சடங்குகளின் படி திருமணம் செய்து கொள்ளலாம். மதச்சடங்குகள் வேறுபட்டிருந்தாலும் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
பொதுசிவில் சட்டங்கள் அமலுக்கு வந்தபின் நடைபெறும் திருமணங்கள் பதிவு செய்யாவிட்டால் அந்த திருமணங்கள் செல்லாது என அறிவிக்கப்படும்.
கணவன் – மனைவி இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெறலாம். கணவன் – மனைவி இருவரில் ஒருவர் வேறொருவருடன் உடல்ரீதியான தொடர்பு வைத்திருத்தால் விவகாரத்து கோரி விண்ணப்பிக்கலாம்.
திருமணத்திற்கு பின் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்தால் விவாகரத்து கோரலாம்.
கணவன் – மனைவி இருவரில் ஒருவர் மதம் மாறியிருந்தால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விவாகரத்து என்பது ஒருவருடைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் படி செய்ய முடியாது. திருமணமாகி ஒரு வருடத்திற்குள் விவாகரத்து கோருவது தடை செய்யப்படும். இருப்பினும் அரிதான சந்தர்ப்பங்களில் அதனை தாக்கல் செய்யலாம்.
லிவ் – இன் உறவில் உள்ளவர்கள் மாவட்டப் பதிவாளரிடம் தங்களின் உறவை அறிவித்து பதிவு செய்ய வேண்டும். லிவ் – இன் உறவில் இருந்து பிறக்கும் குழந்தை அதிகாரப்பூர்வமாக கருதப்படும்.
சிறார்களும், திருமணமானவர்களும் லிவ் – இன் உறவில் வாழ அனுமதி இல்லை. அவர்களை அப்படி வாழ்வதற்கு கட்டாயப்படுத்தவும் கூடாது. 21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் லிவ் – இன் உறவில் இருக்க வேண்டுமெனில் முதலில் தங்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும்.
ஒரு மாதத்திற்கு மேலாக லிவ் இன் உறவில் வாழ்ந்து அதனை தெரிவிக்காத இளைஞர் – இளம் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
லிவ் – இன் உறவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.