வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக விசாரிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டங்கள வந்தாலும் எதிர்வினையாற்றி வருவதை திமுகவினர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிகளின் நிலை அபாய கட்டத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் புதிய மாவட்ட தலைவர்களால் பாஜகவில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதாகவுவும், 2026ஆம் தேர்தலை புதிய உத்வேகத்துடன் சந்திப்போம் என்றும் தமிழிசை கூறினார்.