ராமநாதபுரம் அருகே உள்ள வெக்காளியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் குயவன்குடி கிராமத்தில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி தேமடைந்ததால், பருவத்தில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி பெண்கள் மாலை அணிவித்து விரதம் மேற்கொண்டனர்.
குயவன்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் விரதமிருந்து, பால்குடம் ஏந்தி வந்து அம்மனை வழிபட்டனர். பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக வந்த பெண்களில் ஒரு சிலர் சாமியாடி பக்தியை வெளிப்படுத்தினர். பின்னர், அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.