சமூக முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தலைசிறந்த ஆன்மீகவாதியாகவும், கல்வியாளராகவும், 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமது மேலான பணிகள் மூலம் மக்களின் அன்பைப் பெற்றிருந்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள்.
எளிய மக்கள் வாழ்வில் முன்னேற, கல்வி ஒன்றே வழி என்பதை உணர்ந்து, பல கல்வி நிறுவனங்களை நிறுவி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.
சுவாமி சகஜானந்தா அவர்கள் நிறுவிய நந்தனார் கல்விக் கழகம், இன்று பல லட்சம் மாணவர்களை, சமூகத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்கியிருக்கிறது. சமூக முன்னேற்றத்துக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.