பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அரசு பத்திரங்கள் மூலமாகவும், ரெப்போ விகித ஏலம் மூலமாகவும், சந்தையில் பணத்தை செலுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
) இது பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பண மதிப்பிழப்பை தடுக்கவும் உதவியாக அமையும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.