சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விடுமுறையின்போது வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை இருந்து வருகிறது.
இதனை தவிர்க்க சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இப்புதிய சாலையை அமைப்பதற்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
புதிதாக இந்த சாலை அமைக்கப்படும்போது, மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியிலிருந்து ஈசிஆரில் உள்ள பூஞ்சேரி வழியாக வாகனங்களை திருப்பிவிட முடியும்.
கருங்குழி – பூஞ்சேரி புதிய சாலை பயன்பாட்டுக்கு வந்தால், தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சிரமமின்றி சென்னையை விட்டு வெளியே செல்லவும், மீண்டும் திரும்பவும் வழிவகை ஏற்படும்.