அமெரிக்கா மீது பாய்ச்சல் : கை, கால்களை கட்டி நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்கள்!
Sep 30, 2025, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா மீது பாய்ச்சல் : கை, கால்களை கட்டி நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்கள்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப் பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற செயலுக்கு பிரேசில் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2023ம் ஆண்டு, அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 47.8 மில்லியனை எட்டியுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 14.3 சதவீதம் ஆகும். இந்தப் பட்டியலில், மெக்சிகோ 10.6 மில்லியன் மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தப் படியாக 2.8 மில்லியன் இந்தியர்களும், 2.5 மில்லியன் சீனர்களும் அமெரிக்காவில் உள்ளனர்.

இத்துடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 11 பில்லியன் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை கணக்கிட்டுள்ளது.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், புலம்பெயர்ந்தோரின் வருகையை அமெரிக்க மீதான படையெடுப்பு என்று குறிப்பிட்டார். மேலும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை அறிவித்ததோடு, அப்பகுதியைப் பாதுகாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டார். கூடுதலாக, பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்தார். தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களில், 548 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப் பட்டனர். முதல் நடவடிக்கையாக, 265 பேர் கவுதமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்டவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட விமானத்தைத் தரையிறங்க மெக்சிகோ அரசு மறுத்தது. இதனையடுத்து, அந்த விமானம், கவுதமாலாவுக்கு திருப்பி விடப்பட்டது.

விரைவில், மெக்சிகோ மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, நாடு கடத்தப்பட்ட 88 பிரேசில் மக்கள், 16 அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, பெலோ ஹொரிசோண்டேவில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மனாஸ் பகுதியில் தரையிறக்கப் பட்டது.

விமானத்தில் வந்து இறங்கிய இருந்த 88 பிரேசில் மக்கள் கைவிலங்குடன் கணுக்கால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு பிரேசில் அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கைவிலங்குகளை அகற்றுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்தக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்த பிரேசில் அதிபர் லூலா, நாடு கடத்தப்பட்ட மக்களின் தங்கள் பயணத்தை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, விமானப்படை விமானத்தை அனுப்புமாறு உத்தரவிட்டார் என்று அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயணம் முழுவதும் கைவிலங்குகளுடன் இருக்க வைக்கப்பட்டதாகவும், குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படவில்லை என்றும், நாடு கடத்தப் பட்ட பிரேசில் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் விமானத்தின் உட்புறம் வெப்பமாக இருந்ததால், பல மணி நேர பயணத்தில் பலர் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டு மக்களிடம் அமெரிக்கா நடத்தியுள்ள மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கண்டித்துள்ள பிரேசில் அரசு, இது தங்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த குடியேற்ற உத்தரவுடன், இந்த நாடு கடத்தும் விமானம் இணைக்கப்படவில்லை என்றும், இது 2017ம் ஆண்டு போடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் விளைவாகும் என்று விளக்கம் அளித்துள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.

அகதிகள் மீள்குடியேற்றத்தை நிறுத்தியதோடு, புதிய குடியேற்ற உத்தரவுகளைச் செயல்படுத்த மறுக்கும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Tags: americausaBrazilLeaping over the United StatesBrazil's people were deported with their hands and feet tied
ShareTweetSendShare
Previous Post

வைஷாலியுடன் கைகுலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் செஸ் வீரர்!

Next Post

டிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies