குவியும் குற்றச்சாட்டுகள் : புதிய ராணுவ அமைச்சர் தேர்வில் கடும் சர்ச்சை!
Jul 25, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குவியும் குற்றச்சாட்டுகள் : புதிய ராணுவ அமைச்சர் தேர்வில் கடும் சர்ச்சை!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிதி முறைகேடு, குடிப் பழக்கம், தவறான நடத்தை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் ராணுவ வீரரும், FOX NEWS தொலைக்காட்சியின் தொகுப்பாளருமான Pete Hegseth பீட் ஹெக்சேத், அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சராக சென்ட் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். ராணுவ அமைச்சராக அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப் பட்ட பீட் ஹெக்சேத், பெரும் சர்ச்சைகளுக்கு இடையில், தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமான அமெரிக்க இராணுவத்தை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு பெரிய அனுபவம் இல்லாத (Pete Hegseth )பீட்ஹெக்சேத்தை அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்தபோதே கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செனட் வாக்கெடுப்பில், அமெரிக்காவின் ராணுவ அமைச்சராக, Pete Hegseth பீட் ஹெக்சேத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவத் துறையில் சுமார் மூன்று மில்லியன் ஊழியர்கள் பணி புரிகின்றனர். கிட்டத்தட்ட 849 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இராணுவத்துக்காக ஒதுக்கப் படுகிறது.

இவ்வளவு பெரிய பொறுப்புக்குப் பொறுப்பில்லாத ஒருவரா எனக் குடியரசு கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்க ராணுவத்துக்கு “போர்வீரர் கலாச்சாரத்தை” கொண்டு வருவதாக Pete Hegseth உறுதியளித்த போதும், அவரது நடத்தை, தகுதி, பாலியல் முறைகேடு,நிதி முறைகேடு,மற்றும் சர்ச்சைக்குரிய கடந்த காலம் குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.

கூடுதலாக, Pete Hegseth-ன் முன்னாள் மைத்துனர் சார்பில், அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுக்களுடன் சத்தியப் பிரமாணப் பத்திரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மிட்ச் மெக்கானெல் (Mitch McConnell), லிசா முர்கோவ்ஸ்கி (Lisa Murkowski), சூசன் காலின்ஸ் (Susan Collins) ஆகிய மூன்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பீட்ஹெக்சேத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோனி எர்ன்ஸ்ட், நியமனத்துக்கு எதிராக முதலில் இருந்தாலும், வாக்கெடுப்பின் போது Pete Hegseth க்கு ஆதரவாகவே வாக்களித்தார்.

மேலும், 47 ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களும் பீட்ஹெக்சேத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆதரவு வாக்குகளும், எதிர்ப்பு வாக்குகளும் சமமாக இருந்தன.

இப்படி, வாக்கெடுப்பு சமமான நிலையில், துணை அதிபர் JD Vance தனது வாக்கை செலுத்தி, பீட் ஹெக்சேத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

முன்னதாக, ராணுவ அமைச்சராக ஹெக்சேத்தின் தகுதிகள் என்ன ? என்று எழுப்பிய கேள்விக்கு, போர், மரணம், தகுதி, தரம் மற்றும் தயார்நிலை. அதுதான். தமது வேலை என்றும், பாதுகாப்புத் துறையின் கவனத்தை அமெரிக்க ராணுவத்தின் வலிமைக்கு திரும்பச் செய்வதாக உறுதியளித்தார்

ஹெக்சேத்தின் கடந்த கால அறிக்கைகளில் உள்ள கருத்துகள் பற்றியும், ஜனநாயகக் கட்சியினர் கேள்விகள் கேட்டனர். குறிப்பாக, இராணுவத்தில் பெண்கள் பணியாற்றத் தகுதியற்றவர்கள் என்ற ஹெக்செத்தின் கருத்துக்கு விளக்கம் கேட்டனர்.

அதற்கு, தனது கவலை போரில் பெண்கள் அல்ல, மாறாக இராணுவத்தில் “தரத்தை” பராமரித்தல் என்று ஹெக்சேத் பதிலளித்தார்.

அமெரிக்காவில் உள்ள இரண்டு இராணுவ வீரர்களுக்கான அமைப்பில் தலைமை பொறுப்பில் இருந்தபோது தான் பீட் ஹெக்சேத் மீது, நிதி முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கும் நாடாளுமன்றத்தில் முறையான விளக்கத்தை பீட் ஹெக்சேத் சொல்லியிருக்கிறார்.

மேலும், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், பெண்கள் மீதான பார்வைகள் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.

தாம் சரியான நடத்தை கொண்டவர் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஹெக்சேத், அதை திருத்திக் கொள்வதாக தனது கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில், நடத்தை பற்றிய கேள்விகளுக்கு, உணர்ச்சிகரமான குறிப்புகளுடன் பதிலளித்தார்.

ஹெக்சேத்தின் உறுதிப்பாட்டை பாராட்டிய அதிபர் ட்ரம்ப், கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, நாட்டுக்கு ஒரு சிறந்த ராணுவ அமைச்சர் கிடைத்துள்ளார் என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் தரைப்படை அதிகாரியாக பணியாற்றிய 44 வயதான Pete Hegsethக்கு, சிறப்பான ராணுவப் பணிக்காக, இரண்டு வெண்கல நட்சத்திர பதக்கங்கள் வழங்கப் பட்டுள்ளன.

முன்னதாக, பீட் ஹெக்சேத், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபின், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

2014ம் ஆண்டு முதல் FOX News தொலைக்காட்சியில் “FOX & Friends Weekend”நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் ஹெக்சேத் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக LGBTQ முதல் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வரை பல்வேறு விஷயங்களில் ஜனநாயகக் கட்சியினரைக் கடுமையாக தாக்கி பேசிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: donald trump 2025US ArmyAccumulating accusations: Controversy in the selection of the new army minister!Pete HegsethMitch McConnellusa
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி!

Next Post

பத்ம விருது வென்ற நட்சத்திரங்கள் : எம்.எஸ்.சுப்புலட்சுமி முதல் அஜித் வரை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies