இதுவரை ஆறு விதமான ஏவு ஊர்திகளை ஆய்வு செய்துள்ள இஸ்ரோ நாளை நூறாவது விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை விண்ணில் செலுத்தப்படும் இரண்டாவது தலைமுறை நேவிகேஷன் செயற்கைகோளால் மக்களுக்கு ஏராளமான பயன் கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி ஆலோசனையின் பேரில் வணிக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.