நீலகிரி மாவட்டம் உதகை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி படுகர் இன மக்கள் வழிபாடு நடத்தினர்.
எப்பநாடு மலை கிராமத்தில் உள்ள பீரமுக்கு ஈஸ்வரன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மலை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருவிழாவில் பங்கேற்ற படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி வழிபாடு நடத்தினர்.