சீனாவில் பணியின்போது தூங்கிய நாய்க்கு ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள போலீஸ் நாய் பயிற்சி தளத்தில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் நாய் ஒன்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பணியின் போது தூங்கியதற்காக இந்த நாய்க்கு வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த புகாரிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அபராதமாக அந்த நாய்க்கு வழங்கப்படும் தின்பண்டங்கள் அகற்றப்பட்டுள்ளன.