'தன்பாலின' திருமணங்களுக்கு அங்கீகாரம் : திருமண சமத்துவத்தை சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து!
Jun 6, 2026, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

‘தன்பாலின’ திருமணங்களுக்கு அங்கீகாரம் : திருமண சமத்துவத்தை சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்கிழக்கு ஆசியாவிலேயே தன்பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கி, திருமண சமத்துவத்தை அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

உலக சுற்றுலா தலங்களுள் ஒன்றாக கருதப்படும் தாய்லாந்து நாட்டில் திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் மசோதா நடைமுறைக்கு வந்த நிலையில், நூற்றுக்கணக்கான தன்பாலின ஜோடிகள் அங்குள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் முன்பு வரிசைகட்டி நின்று பெருமகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டனர்.

பிரபல தாய்லாந்து நடிகர்களான APIWATSAYREE மற்றும் SAPPANYOO PANATKOOL ஆகியோர் ஒரே வண்ண ஆடையில் தோன்றி, பேங்காக்கில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் தன்பாலின திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பிங்க் நிறத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட திருமண சான்றிதழ்களை கையில் ஏந்தியபடி, இருவரும் அருகருகே நின்று ஆனந்த கண்ணீர் மல்க புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

APIWATSAYREE – SAPPANYOO PANATKOOL போன்ற நூற்றுக்கணக்கான தன்பாலின தம்பதிகளின் பல ஆண்டு கனவு, தற்போது நினைவாகியுள்ளதால் அந்நாட்டில் தன்பாலின சேர்க்கையாளர்கள் உணர்ச்சிப்பூரிப்பில் திளைத்து வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டில் திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் மசோதா அமலுக்கு வந்துள்ள நிலையில், பிற தம்பதிகளைப்போல நிச்சயதார்த்தம் செய்து திருமண பந்தத்தில் இணைவது, சொத்துக்களை நிர்வகிப்பது, பரம்பரை உரிமை மற்றும் குழந்தைகளை தத்தெடுப்பது போன்ற உரிமைகளை தன்பாலின தம்பதிகளும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் மைல்கல்லை தன்பாலின தம்பதிகள் அத்தனை சாதாரணமாக கடந்துவிடவில்லை. பெரும் போராட்டங்களை சந்தித்தே திருமண அங்கீகாரம் என்ற சுதந்திரத்தை அவர்கள் தங்கள் வசமாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தன்பாலின சேர்க்கையாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் நடத்திய பலகட்ட போராட்டங்களே இந்த வெற்றிக்கு வித்திட்டன.

அதன் பலனாக கடந்த 2024-ம் ஆண்டு, ஜூன் மாதம் திருமண சமத்துவ மசோதாவுக்கு ஆதரவாக செனட்டில் 130 – 4 என்ற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு, சட்டம் இயற்றுபவர்களால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து செனட் குழுவுக்கும், நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்ட திருமண சமத்துவ மசோதா, பின்னர் மன்னரிடமிருந்து அரச ஒப்புதலையும் பெற்றது.

திருமண சமத்துவ மசோதாவை நிறைவேற்றியிருப்பதன் மூலம், தாய்லாந்து நாடு தன்பாலின தம்பதிகளின் புகலிடமாக மாறியிருப்பதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது. இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாகவும், ஆசியாவில் தாய்வான் மற்றும் நேபாளத்துக்கு அடுத்தபடியாக 3-வது நாடாகவும் தாய்லாந்து உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவிலும் தன்பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அத்தகைய சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் எல்லைக்கு உட்பட்டது எனக்கூறி தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் தன்பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டாலும், அவர்கள் திருமணம் செய்துகொள்வது என்பது சட்டவிரோதமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: thailandRecognition of 'same-sex' marriages: Thailand legalized marriage equality!'same-sex' marriagesmarriage equality
ShareTweetSendShare
Previous Post

இந்தியா அசத்தல் சாதனை : 5 நாட்களில் ரூ.20 லட்சம் கோடி முதலீடு!

Next Post

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி-20 : 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

Related News

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

அந்த நிறுவனத்தை நம்பியதால் மோசம் – கள ஆய்வில் குமுறிய திமுக தொண்டர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies