இந்தியா அசத்தல் சாதனை : 5 நாட்களில் ரூ.20 லட்சம் கோடி முதலீடு!
Sep 14, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா அசத்தல் சாதனை : 5 நாட்களில் ரூ.20 லட்சம் கோடி முதலீடு!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐந்து நாட்கள் நடந்த உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்திலிருந்து, இந்தியா 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு உறுதிமொழிகளை உள்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய குழுவை இந்தியா அனுப்பியிருந்தது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், ஐந்து மத்திய அமைச்சர்கள், மூன்று மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட இந்தியக் குழு இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.

மேலும்,சமூகம் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த ஏறக்குறைய 100 CEO க்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டனர்.

உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இருந்து, 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை இந்தியா கொண்டு வந்துள்ளது. பசுமை எரிசக்தி, அதிநவீன தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தரவு மையங்கள் ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்க்க கவனம் செலுத்தப்பட்டதாக கூறப் படுகிறது.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, மொத்த முதலீடுகளில் 80 சதவீதத்தை கவர்ந்துள்ளது.

15.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 61 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) மகாராஷ்டிரா மாநில அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களில் மூலம் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 1.79 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான திட்டத்துடன் உள்ள உத்தரபிரதேசம் அரசும் தொலைநோக்குப் பார்வையுடன் முக்கிய முதலீடுகளையும் பெற்றுள்ளது.

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், உலகளாவிய குளிர்பான நிறுவனமான AB InBev, இந்தியாவின் beverage துறையில், பல்வேறு மாநிலங்களில் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், தெலுங்கானாவில் இரண்டு புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்கும் திட்டங்களை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, ஏராளமான பிற உலகளாவிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சாத்தியமான ஒப்பந்தங்களை ஏற்படுத்த ஆய்வுகள் செய்துள்ளன.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகளும் இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பிரத்யேக இரண்டு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழிநடத்திய “டீம் இந்தியா”, தங்கள் திறனை சர்வதேச நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தியது.

முதல் முறையாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாநில மற்றும் மத்திய அமைச்சர்களைக் கொண்ட ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார சூழ்நிலையில் மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், இந்தியா அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்கும் நம்பகமான மற்றும் ஜனநாயகம் மிக்க நாடாகவும் உருவெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அமைதி, வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதியை உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Ashwini vaishnawIndia at Davos 2025: Key states showcase investment opportunities and innovation at world economicIndia is a fantastic achievementRs.20 lakh crore investment received in 5 days!
Share
Tweet
SendShare
Previous Post

பத்ம விருது வென்ற நட்சத்திரங்கள் : எம்.எஸ்.சுப்புலட்சுமி முதல் அஜித் வரை!

Next Post

‘தன்பாலின’ திருமணங்களுக்கு அங்கீகாரம் : திருமண சமத்துவத்தை சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies