டிரம்பின் முடிவால் கதறிய செலினா கோம்ஸ் : அழுதபடி பதிவிட்ட வீடியோ!
Jul 24, 2025, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டிரம்பின் முடிவால் கதறிய செலினா கோம்ஸ் : அழுதபடி பதிவிட்ட வீடியோ!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நாட்டவர்கள் வெளியேற்றப்படுவதை குறிப்பிட்டு அழுதபடி பிரபல பாடகியும், நடிகையுமான செலினா கோம்ஸ் வீடியோ வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கியுள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றார். பதவியேற்றது முதல் ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை அடிப்படையாகக்கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோத குடியேற்றங்கள் தடுக்கப்படும் என உறுதியளித்த அவர், அமெரிக்காவினுள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், 4 ஆயிரம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிளவுடியா ஷீன்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மெக்சிகோ வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பாடகியும், நடிகையுமான செலினா கோம்ஸ், அதிபர் டிரம்பின் முடிவால் தனது நாட்டு மக்கள் தாக்கப்படுவது வருத்தமளிப்பதாகக் கூறி, கதறி அழுதபடி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். மெக்சிகோ நாட்டின் கொடியுடன் “என்னை மன்னித்துவிடுங்கள்” என்ற வாக்கியத்தையும் அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த வீடியோ சில நிமிடங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது. இதனால் செலினா கோம்ஸ் தான் பதிவிட்ட வீடியோவை உடனடியாக நீக்கினார். அத்துடன், “வெளிப்படையாக மக்களுக்கு பச்சாதாபம் காட்டுவதுதான் தவறு” என பதிவிட்டார். அதுவும் விமர்சனத்திற்குள்ளாக அந்த பதிவையும் அவர் நீக்க நேரிட்டது.

2019-ம் ஆண்டு “LIVING UNDOCUMENTED” என்ற NETFLIX ஆவணப்படத்தை செலினா கோம்ஸ் தயாரித்திருந்தார். அந்த ஆவணப்படம் குடியேற்றத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக குடியேறிய 8 குடும்பங்கள் குறித்தும் விவரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: usadonald trump 2025Selena Gomez cried because of Trump's decision: The video posted while crying!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருகிறது : அதிர்ச்சி தகவல்!

Next Post

இந்த தொழிலில் இவ்வளவு வருமானமா?: கல்லறைகளை சுத்தம் செய்தே சொந்த வீடு வாங்கிய UK இளைஞர்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies