மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணியின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணியான 32 வயது பெண்ணுக்கு சோனோகிராபி செய்தபோது அவரின் ‘கருவில் கரு’ வளருவது கண்டறியப்பட்டது.
அதாவது பெண்ணின் வயிற்றுக்குள் உண்டாகியுள்ள குழந்தையின் உடலினுள் மற்றொரு முழு வளர்ச்சியடையாத கரு உருவாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இது மிகவும் அரிதான நிலை என்றும், இதுபோன்ற ஒரு நிலையை கற்பனை கூட செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.