காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், கடந்த 2023 ஜூன் 18ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தால், கனடா – இந்தியா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
















