புதுக்கோட்டை அருகே எள் ஏற்றி சென்ற மினி லாரி டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கும்பகோணத்திலிருந்து எள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. திருமயம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்ததில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.