விண்வெளியில் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்து சுனிதா வில்லியம்ஸ் புதிய உலக சாதனை படைத்ததாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே ஸ்பேஸ் வாக்கில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, நீண்ட நேரம் விண்ணில் நடந்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
9 ஆவது முறையாக ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களை கழித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், 9 நாள்களில் திரும்பி வரவேண்டிய நிலையில், விண்கலன் கோளாறு காரணமாக தற்போது வரை பூமி திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.