களத்தில் குதித்த இந்தியா: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் AI Volkai அறிமுகம்!
Oct 26, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

களத்தில் குதித்த இந்தியா: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் AI Volkai அறிமுகம்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க ChatGPT, GEMINI, OpenAI மற்றும் சீனாவின் Deepseek போன்ற AI களுக்குச் சவால் விடும் வகையில், இந்தியாவின் முதல் ஜெனரேட்டிவ் AI வந்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள Volkai என்னும் AI, இந்திய சந்தைக்காகவே பிரத்யேகமாக வடிமைக்கப் பட்டுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

AI தொழில் நுட்ப சந்தையில் அமெரிக்க நிறுவனங்களே முன்னணியில் இருக்கின்றன. தங்களை விட்டால் AI துறையில் யாரும் இல்லை என்று அமெரிக்க AI நிறுவனங்கள் எண்ணுகின்றன.

இந்த சுழலில் தான், சத்தமே இல்லாமல் சீனாவின் Deep Sake AI கடந்த வாரம் அறிமுகமானது. சர்வதேச தொழில் நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, செமி கண்டக்டர் நிறுவனங்களும் Deep Sake வருகையால் இழப்பைச் சந்தித்தன. தொடர்ந்து, ஒரே நாளில் அமெரிக்க பங்கு சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இந்நிலையில், Kairosoft AI Solutions என்ற நிறுவனம், Volkai என்னும் பெயரில், இந்தியாவின் முதல் ஜெனரேட்டிவ் AI உருவாக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த உள்ளடக்கம் மற்றும் பட உருவாக்க திறன்களை ஒரே தளத்தில் வழங்கும் முதல் AI இதுவாகும். இந்த திறன்களை ஒரே தளத்தில் வழங்கும் மூலம். AI பயன்படுத்த பல கருவிகளைத் தேவையில்லாமல் போகிறது.

ChatGPT, GEMINI, OpenAI, Deepseek போன்ற AI கள், பெரும்பாலும் அதிக கட்டணங்களை வைத்துள்ளன. மேலும் அவை இந்திர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதில்லை.

இந்திய சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், Volkai AI வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட AI தொழில் நுட்பத்துடன்,எளிதில் அணுக கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய கலாச்சாரம் மற்றும் பல்வேறு இந்திய மக்களின் பேச்சுவழக்குகளின் நுணுக்கங்களை இந்த Volkai AI புரிந்து கொள்கிறது.

இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அவரவர் நிலம்,மொழிக்குப் பொருத்தமான உள்ளடக்கம் மற்றும் படங்களை Volkai AI உருவாக்குகிறது.

சுருக்கமாக இந்திய பன்முக கலாசார உணர்திறன் மிக்கதாக இந்த Volkai AI உள்ளது. இது உலகிலேயே முதல் கலாச்சார நுண்ணறிவு தொழில் நுட்பமாகும். இது மின் வணிகம் மற்றும் கல்வித் துறைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

விஷன் கிரியேட்டர் என்ற அம்சத்துடன் விளங்கும் இந்த Volkai AI யதார்த்தமான காட்சிகளை உருவாக்கவும் , மிகையான காட்சிகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது. அதாவது, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதற்கேற்ற இமேஜ்கள் மற்றும் நவீன புடவை வடிவமைப்புகள் கலாச்சார ரீதியாக உருவாக்கவும் பயன்படுகிறது.

புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம், சிறு வணிகர்கள், கல்வியாளர்கள்,மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு Volkai AI பயன்படுத்தமுடிகிறது.

‘அனைவருக்கும் AI’ என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக, இந்த Volkai AI கட்டமைக்கப்பட்டுள்ளதாக கைரோசாஃப்ட் AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இப்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும், இந்த Volkai AI இந்திய பழக்கவழக்கங்கள், பேச்சுவழக்குகள் மற்றும் கலாசாரத்தைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது.

சர்வ தேச அளவில் AI மேலாதிக்கத்திற்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது.

வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவை சார்ந்திருப்பதைக் குறைத்து, தன்னம்பிக்கை கொண்ட தனித்த டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, AI ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.

18,000 GPU-கள் செயல்பாட்டில் இருப்பதால், நாட்டின் தனித்துவமான மொழியியல், பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு உள்நாட்டு AI மாதிரியை உருவாக்கும் பாதையில் இந்தியா சிறப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Indiaunion minister ashwini vaishnawIndia jumps into the fray: Introducing the first indigenously developed AI Volkai!AI Volkai
ShareTweetSendShare
Previous Post

கிராமப்புற மக்களை ஏமாற்றியுள்ளார் கெஜ்ரிவால் : அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

அமெரிக்காவின் பொருட்களுக்கு கனடா, மெக்சிகோ வரி விதிப்பு!

Related News

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies