உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏடிஎம்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாவதாகவும், நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாகவும் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் எஸ்.ஜார்ஜ் குற்றஞ்சாட்டினார்.
4 ஒப்பந்தாரர்களின் பணிகளின் தரம் இல்லாததால் அவர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என கடந்த முறை வலியுறுத்தியும் மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் குடிநீர் குழாய்கள் தரமாக அமைக்கப்படவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.