திருப்பூரில், மக்களை பாதிக்கும் சொத்து வரி உள்ளிட்டவைகளை குறைக்காவிட்டால், மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி கவுன்சிலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சொத்து வரி, குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை வரி ஆகியவற்றை குறைக்க வேண்டும் என உறுப்பினர்கள் அளித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுக, பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.