ஓசூர் அருகே வெளிமாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டெல்லி மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை மடக்கி சோதனையிட்டதில், 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, 12 கிலாே கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு காரில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனிடையே, காரில் இருந்து தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
















