பள்ளிக் கல்வித்துறையை டிராமா மாடல் திமுக அரசு படுகுழியில் தள்ளியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக ASER என்ற அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டது.
இதை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து வெளிவந்த ASER ஆய்வறிக்கை அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ASER ஆய்வறிக்கையின் மூலம் பல பிரிவுகளில் தமிழகம் பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கியிருப்பது தெரியவருகிறது என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறையை டிராமா மாடல் திமுக அரசு படுகுழியில் தள்ளியுள்ளது என விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் கல்வித்தரம் குறித்து திமுக அரசு கூறி வருவதற்கு நேர்மாறாக ASER ஆய்வறிக்கை உள்ளது என தெரிவித்துள்ள அண்ணாமலை, 4 ஆண்டுகளாக விளம்பரம் செய்வதில் மட்டுமே டிராமா மாடல் திமுக அரசு நம்பர் ஒன்னாக இருக்கிறது என விமர்சித்துள்ளார்.