இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்ட்யா – சிவம் துபே ஜோடி, இங்கிலாந்து அணியின் பந்துகளை அடித்து நொறுக்கினர்.
20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. 182 ரன் இலக்குடன் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் நிதனமாக ஆடி ரன்கள் எடுத்த நிலையில், ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து, வருண் பந்தில் அவுட் ஆனார்.
இதையடுத்து வந்த வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இ இதனால், இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.