விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாகவும், தமிழகம் முழுவதும் கிளை திறக்க உள்ளதாகவும் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேர், 25 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மோசடி நபர் கங்காதரன் நீதிமன்றத்தில் ஆஜராகததால், அவரை கைது செய்யக்கோரி, நீதிமன்ற உள் வாயில் அருகே பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு முழக்கமிட்டனர்.