நெல்லை டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுனை அடுத்த தென்பத்து பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகநாதன். இவர் வயல் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இரும்பு கம்பியால் சரமாரி தாக்கியதில், ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது உறவினர் வெங்கடேஷ் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரித்ததில், குடும்ப தகராறில் சிறை சென்றதும், ஜாமினில் வெளியே கொண்டுவரும்படி ஜெகநாதனிடம் பலமுறை கூறியும் எடுக்காததால், ஆத்திரத்தில் கொலை செய்ததாக வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொலையாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.