2025 – 2026 பட்ஜெட் 10 முக்கிய ஆதாரங்களை அடிப்படையாக்கக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தொடர்ந்து 8-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது உரையாற்றியவர்,
இந்த பட்ஜெட் 10 முக்கிய ஆதாரங்களை அடிப்படையாக்கக் கொண்டு உருவாக்கப்பட்டது உருவாக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பாரதீய பாஷா புஸ்தக் திட்டம் மூலம் இளைய சமுதாயத்தை ஊக்குவித்து, இந்தியாவிற்காக உற்பத்தி செய்ய, உலகிற்காக உற்பத்தி செய்ய (Made for India, Made for the World) இந்தியா உறுதி பூண்டுள்ளது.
கிசான் கடன் அட்டைகள் மூலம் 7.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டித் தொகை திட்டம் மூலமாக வழங்கப்படுஅம் குறுகிய கால கடன் 3 லட்சம் முதல் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இரண்டாவது பெரிய வளர்ச்சி இயந்திரமாகும். உத்யாம் தளத்தில் பதிவு செய்த குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அட்டை மூல சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
கிசான் கடன் அட்டைகள் மூலம் 7.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டித் தொகை திட்டம் மூலமாக வழங்கப்படும் குறுகிய கால கடன் 3 லட்சம் முதல் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
நீண்ட கால மற்றும் குறுகிய கால கடனை உறுதி செய்தல், நீர்ப்பாசன வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதைஉ 1.7 கோடி ம்மேற்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் என தெரிவித்தார்.
முதலீடு நாட்டின் 3 வது பெரிய வளர்சி கேந்திரம். மக்களின் மீது முதலீடு செய்வது புதுமையில் முதலீடு செய்வது ஆகியவை அரசின் நோக்கம். 2047 இல் அணு ஆற்றல் உற்பத்தியை 100 கிகா வாட்டாக அதிகரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
தேசிய பொம்மைகளுக்கான செயல்திட்டம் மூலமாக பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.
உலகின் 2 வது மீன் வள உற்பத்தி மையமாக இந்தியா விளங்குகிறது என தெரிவித்தார்.
500 கோடி செலவில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.
நிதிப்பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உள்ளது.
36 உயிர் காக்கும் மருந்துகள் அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுவதுமாக விலக்கு . புற்றுநோய், அரிய வகை நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் என தெரிவித்தார்.
சுய உதவிக் குழு மற்றும் கிராமப்புற மக்களின் வங்கி பயன்பாட்டை ஊக்குவிக்க பொதுத்துறை வங்கி மூலம் சிறப்பு வங்கி பயன்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்படும் நிதிப்பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உள்ளது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. மாநிலங்களுக்கான முதலீட்டு நட்பு குறியீடு (Investment friendliness Index) 2025 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு போட்டி மற்றும் ஒத்துழைப்பு கூட்டாட்சி மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பளம் வாங்குவோருக்கான தனி நபர் வருமானத்தில் 12.75 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
பாரத் நெட் திட்டம் மூலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கும் பிராட்பேண்ட் இணைய வசதி உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.
கிக் (Gig) தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும். பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டு, இ-ஸ்ரம் தளத்தில் பதிவுய் செய்யப்பட்டு பி எம். ஜன் ஆரோகிய திட்டம் மூலம் பயன்பெற வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.