கீழக்கரை அருகே வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு மர்மநபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த நூர்ஜகான் என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
வீடு, கடை மற்றும் விசேஷ காலங்களில் சமையல் வேலை செய்து நூர்ஜகான் பிழைப்பு நடத்தி வந்த நிலையில், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அவரை, மர்மநபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
நூர்ஜகானின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கீழக்கரை பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.