ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை அருகே 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வீரகனூரில் வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செயல்படும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கடையிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து டாஸ்மாக் கடையின் சுவரை ஒட்டிய பகுதியில் வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
24 மணி நேரமும் இளைஞர் மது விற்பனையில் ஈடுபட்ட வந்த நிலையில், இதனை அப்பகுதி இளைஞர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மது விற்பனையில் ஈடுபட்ட வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.