நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவ கல்லூரிகளில் அடுத்தாண்டு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என கூறினார்.
பாரத் நெட் திட்டம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மேல்நிலை பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்த அவர், 50 ஆயிரம் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும் எனவும், கல்வித்துறையில் ஏ.ஐ. திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.