பழவேற்காடு தினத்தையொட்டி, கலைநிகழ்ச்சி மற்றும் மீனவர்களுக்கான கட்டுமரப்போட்டி ஆகியவை உற்சாகமாக நடைபெற்றன.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த 14 ஆண்டுகளாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், பழவேற்காடு ஏரியில் மீனவர்கள் பங்கேற்ற கட்டுமரப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.