பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 18 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது இறுதிச்சடங்கில் பலூசிஸ்தான் முதலமைச்சர் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வீரர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 18 வீரர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.