பெரம்பலூர் அருகே தீப்பிடித்த காரில் இருந்து இளைஞர்கள் 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்த உமர் அப்துல்லா, ஹக்கீம், பீர் முகமது ஆகிய மூவரும், உறவினர்களை காரில் அழைத்துக்கொண்டு கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியில் இறக்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மூவரும் காரிலிருந்து இறங்கி உயிர் தப்பினர். தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தபோதிலும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.