நீலகிரி மாவட்டம் கூடலூரில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய வழக்கில் திமுக நகர்மன்ற உறுப்பினரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஈப்பங்காட்டின் 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக சத்தியசீலன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது வார்டு பகுதியில் இரண்டு மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி, அதனை வெட்ட கோட்டாட்சியரிடம் சத்தியசீலன் அனுமதி பெற்றார்.
பின்னர் அவற்றை வெட்டியதோடு அப்பகுதியில் உள்ள ஈட்டி மரத்தையும் சட்டவிரோதமாக வெட்டியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகாரளித்த நிலையில், சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சத்தியசீலனைஅதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.