சென்னை சித்தாலப்பாக்கத்தில் இறப்பு சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் தற்கொலைக்கு முயன்றார்.
சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது தந்தை இறந்து 2 வருடங்கள் ஆகியும், இறப்புச் சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.