சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளைஞரை கொடூரமாக கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள், காவல் கண்காணிப்பாள் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ரணசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர், விக்னேஸ்வரன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சண்முகநாதனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஸ்வரன் இறப்பிற்கு முன் விரோதமே காரணம் என்றும், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விக்கி என்பவரின் தாயாருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் எனவும், சண்முகநாதனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.