புதுச்சேரி காரைக்காலில் போலியான ரசீதுகளை தயார் செய்து வரி ஏய்ப்பு செய்த புகாரில் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரை ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் சிவராமன் என்பவர் காரைக்காலில் அண்ணாச்சி அன் கோ என்ற பெயரில் கட்டுமானப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிறுவனம் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபடுவதாக புதுச்சேரி மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை வரி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், காரைக்கால் உள்ள அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 2 ஜிஎஸ்டி பதிவெண்கள் பெற்று 227 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராமகிருஷ்ணன் சிவராமன் கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்து 191 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.