கன்னியாகுமரி அருகே, 3-வது முறையாக இந்து கோயில் சிலைகளை உடைத்த நபர்களை கைது செய்யவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்து விளை என்ற பகுதியில் இசக்கியமன் கோயில் அமைந்துள்ளது. டிசம்பர் 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சஜின் என்பவர் தலைமையிலான கும்பல், கோயில் பூசாரியை தாக்கியதோடு, சிலைகளையும் சேதப்படுத்தியது. இது தொடர்பான புகாரின் பேரில், சஜின் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், சஜின் தலைமையில் 2 பைக்குகளில்
ஆயுதங்களுடன் வந்த கும்பல், கோயிலில் இருந்த
சுடலைமாடசாமி சிலை உள்ளிட்டவறை மீண்டும் அடித்து உடைத்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், கோயில் மற்றும் சிலைகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.