தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 5 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியில் கோமதி என்பவர் வீட்டில் 18 சவரன் நகை கொள்ளை போனது.
சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற டேவிட், மணி, மணிகண்டன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், முத்துகாளிப்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் திருடிள்ளது தெரிய வந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவியரசு, வசந்த் ஆகியோரும் இதில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார், 5 பேரையும் கைது செய்தனர்.