நாமக்கல் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 70 லட்சம் ரூபாய் இழந்த லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் அருகே உள்ள சடையம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி 70 லட்சம் ரூபாய் இழந்ததால், அவரது நண்பரது கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தமிழ்மணி இறக்கும் முன்பு வெளியிட்டுள்ள வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.