ஒடிசா மாநிலம், கலஹண்டியில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 கோடியே 51 லட்சம் ரூபாய் ரொக்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 30-ம் தேதி அங்குள்ள ஒரு மதுபானக் கடையை ஒரு கும்பல் சூறையாடிவிட்டு காரில் தப்பிச் சென்றது. இது தொடர்பாக, மதுக்கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொள்ளை கும்பல் தப்பிச் சென்ற கார், ஜார்கண்டில் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளை கும்பலை கைது செய்தனர்.